×

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் நியமனம்: செயலாளர் தயாநிதி மாறன் எம்பி அறிவிப்பு

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்து செயலாளர் தயாநிதி மாறன் எம்பி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் எம்பி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி-மாவட்ட செயலாளர் ஒப்புதலோடு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர்-ராஜராஜன், துணை அமைப்பாளர்கள்-ஹாக்கி எம்.எஸ்.சதிஷ், ஆர்.உதயகுமார், கே.குமரவேல், கே.கமல், ஆர்.வினோத் கண்ணன், அன்பு செழியன், வி.எஸ்.கவாஸ்கர், அ.ஷிபா தானு, எம்.இருதயராஜ், பா.ராஜீவ்குமார்.

சென்னை தெற்கு மாவட்ட அமைப்பாளர்-வேளச்சேரி வே.ஆனந்தம், துணை அமைப்பாளர்-கே.பிரபு, மோ.எழில், இரா.பாஸ்கரன், ஆர்.ஆனந்த், ஏ.ஜி.வேலன், கே.சரவணன், செ.சதீஷ், டி.எசக்கியேல், எஸ்.கார்த்திக், சி.செந்தில்குமார், ஜி.சதிஷ்குமார், எஸ்.நவீன்குமார், எஸ்.சுரேஷ் பிரபாகரன், எஸ்.ஏ.மோகன் குமார், இர.தமிழன்பன், வெ.கிஷோர் குமார், ச.ஜெயராம் சென்னை வடகிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர்-ம.கண்ணதாசன். சென்னை தென்மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர்கள்-டி.கண்ணன், ச.அசோக் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல மயிலாடுதுறை மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், மதுரை மாநகர் மாவட்டம், புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், தேனி தெற்கு மாவட்டம், சிவகங்கை மாவட்டம், திருநெல்வேலி மத்திய மாவட்டம், தென்காசி வடக்கு மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டத்திற்கான மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பெயர்களை தயாநிதி மாறன் எம்பி அறிவித்துள்ளார்.

The post திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் நியமனம்: செயலாளர் தயாநிதி மாறன் எம்பி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dayaniti Varan ,MB ,Chennai ,Kazhagam Sports Development ,Dayaniti Maratan ,Dinakaran ,
× RELATED 96 எம்பி தொகுதிகள் மற்றும் 2...